Wednesday, February 25, 2026

 

வேள்,வேளிர்,வேளாளர்,வெள்ளாளர்

வரலாறு- ஆதிசைவ தொண்டைமண்டலத்தான்
வேளாளர்கள் என்பவர்கள் உலகில் நெல்நாகரிகத்தை முதல்முதலில் தோற்றுவித்த, மிக தொன்மையான தமிழ்குடி. வேளாளர்களின் பரிணாம வளர்ச்சியை, வேள்,வேளிர், வேளாளர், வெள்ளாளர், காராளர், ஒளியலர், மதியாளர் என்ற ஒரு தொன்மையான சொல்லாடல் மூலம் அறியலாம். மேலும், இவர்கள் வெள்ளத்தை அணைகொண்டு தடுத்து, வேளாளண்மை செய்வதால் வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். வேளாளர்கள் காலகாலமாக நிலஉடமைதாரர் சமூகமாக வாழ்ந்துவருகின்றார்கள். அதனால் தான் இவர்கள், பூபாலர், பூமிபுத்திரர் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்கள். கங்காபுத்திரர், கங்காகுலத்தார், பாகிரதகோத்திரிகள் போன்றவையும் இவர்களுக்கான சிறப்பு பெயர்களே ஆகும். இவர்கள் மூவேந்தர்களை போல, முக்கோடியும் (சிங்கம்,குயில்,மேழி) குவலைமாலையும் அடையாளமாக கொண்டிருந்தனர்.
இப்படிப்பட்ட உயர்வான வேளாளர்களின் தோற்றத்திற்கும், சைவசமயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு முறை திருகைலாயத்தில் பார்வதிதேவியும் பரமசிவனும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஈசனின் கண்கள் இமைக்காமல் இருப்பதைக்கண்டு வியந்த உமாதேவி அதை பற்றி வினவினார். அப்பொழுது ஈசன் தன் இருக்கண்களும் சந்திரசூரியர் என்றும், தான் கண்ணிமைத்தால் அவர்கள் ஒளிழந்து போவார்கள் என்றும், அப்படி நடந்தால் அண்டசராசரமும் ஒளியிழந்து போகும் என்றும், கூறினார். இதனை சோதித்துப்பார்க்க விரும்பிய தேவி, விளையாட்டாக ஈசானின் கண்களை தன் திருக்கரத்தால் மூடினார். அப்பொழுது, ஈசன் சொன்னது போலவே,சூரியச்சந்திரர் ஒளி இழந்தனர், அண்டசராசரமும் இருண்டது. மக்களின் துயர் பொறுக்கா ஈசன் தன் மூன்றாவது கண்ணை திறந்தார். அக்னிநேத்திரமான மூன்றாவது கண்ணில் இருந்துவந்த ஒளியால் சூரிய சந்திரர் மீண்டும் ஒளிபெற்றனர். உலகத்தை சூழ்ந்த இருள் விலகியது.அக்னிப்பிழம்பால் ஏற்பட்ட உஷ்ணத்தால் தேவியின் திருக்கரங்களில் இருந்து வேர்வை ஆறாக ஓடியது.அது கங்கைநதியாக உருவெடுத்தது.அதில் இருந்து திருமேழியோடு தோன்றிய வேளாளர்கள், பார்வதிதேவியை, வாஞ்சையுடன் "அம்மை" என்று விளித்தனர். உமையம்மையும் அவர்களை "பிள்ளைகளே" என்று வாஞ்சையுடன் அழைத்தார். அப்படி தான் வேளாளர்களின் பிரதான பட்டமான பிள்ளை பட்டம் உருவானது. தேவியின் விளையாட்டால் உலகம் அவதியுற்றதை கண்டு சினந்த ஈசன், தேவியிடம், "நீ செய்த தவறுக்கு பிராச்சித்தமாக பூலோகம் சென்று, கங்காநதிக்கரையில் எனக்கு ஒரு லிங்கம் அமைத்து பூஜிப்பாயாக, தக்க தருணம் வரும்பொழுது, யாமே அங்கு எழுந்தருளி உம்மை ரட்சிப்போம்மாக" என்று கூறினார். ஈசனினின் சொல்லுக்கு இசைந்த அம்மையும், திருக்கைலாயத்தை விட்டு பூலோகம் செல்ல இசைந்தார். உமையம்மை பூலோகம் செல்வதை கண்டு வருந்திய வேளாளர்கள், அம்மைக்கு துணையாக தாங்களும் பூலோகம் செல்வதாக கூறினார். இறைவனின் ஆசிபெற்று, முத்துப்பல்லக்கில் உமையம்மையை சுமந்துகொண்டு, ராமவாணி சாமரம் வீச, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ, வேளாளர்கள் கங்கைக்கரையை அடைந்தனர். அங்கு மண்டிக்கிடந்த கொடுங்காட்டை திருத்தி, நாடு சமைத்து, காசிமாநகரத்தை உருவாக்கினார்கள். அங்கு விசாலாக்ஷியாக எழுந்தருளிய உமையம்மை, விஸ்வநாத லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு வந்தார். இப்படியாக வேளாளர்கள் திருக்கைலாயத்தில் இருந்து பூமிக்கு வந்தனர். கங்கையில் இருந்து தோன்றியதால் இவர்கள் கங்காபுத்திரர்கள், பகீரதகோத்திரர் என்று அழைக்கப்பட்டனர். காட்டைதிருத்தி நாடு சமைத்தால் இவர்கள் பூபாலர், பூமிபுத்திரர் என்று அழைக்கப்பட்டனர். மேழிகொண்டு பூமியை பிளந்து பயிர் தொழில் செய்ததால், திருமேழியர்,மேழியர்கோன் என்று அழைக்கப்பட்டனர்.
மஹாபாரதகாலத்தில் மகததேசத்தை சேர்ந்த ஜெயரதன் தொடர்ந்து படையெடுத்ததால், கிருஷ்ணன் மதுராபுரியில் உள்ள வேளாளர்களை அழைத்துக்கொண்டு குரதேசம் சென்றார் என்ற ஒரு செய்தி உண்டு. அங்கு வேளாளர்கள் காட்டை திருத்தி நாடாக்கி, துவாராகாபுரியை உருவாக்கினார்கள்.கங்கை கரையில் இருந்து வந்ததால் இவர்கள் கங்கா புத்திரர்கள் என்று சிறப்பிக்கப்படுகிறார்கள். இந்த செய்தி மஹாபாரதத்திலேயே உள்ளது.
பிறகு, அகத்தியபெருமான் தெற்கு நோக்கி வரும்பொழுது, துவராகபுரிக்கு சென்று கிருஷ்ணபகவனிடம் வேண்டி அந்தணர்களையும், 18 வேளிர் அரசர்களையும், வேளாளர்களையும் தெற்கே அழைத்து வந்தார். இந்த செய்தி தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வரும்பொழுது குடகுபகுதியில், அகத்தியரின் கமண்டலத்தை காக்கை உருவில் வந்த விநாயகர் கவிழ்த்துவிட, காவிரி நதி உருவாகிறது. அங்கேயே சில வேளாளர்கள் தங்கி வேளாளண்மை செய்ய தொடங்கினர். அவர்கள் உருவாக்கிய நாடு தான் துளுநாடு. இவர்கள் தான் இன்றைய துளுவ வேளாளர்கள்.
மற்ற வேளாளர்கள் அகத்தியருடன் பொதிகை மலையை அடைந்தனர். அங்கு காட்டை திருத்தி நாடாக்கி பாண்டிய தேசத்தை உருவாக்கினார். பாண்டியர்களே வேளாளர்கள் தான். சுத்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவர்கள் தான் இன்றைய நற்குடிவேளாளர்கள்.
பிறகு சோழவம்சாவழியை சேர்ந்த ஆதொண்டை சக்ரவர்த்தி, வடதேசம் சென்று, தனக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கியபொழுது, அவருடன் சென்று, குரும்பர்களை வென்று காடுதிருத்தி நாடாகி தொண்டைமண்டலத்தை உருவாக்கியவர்கள், இந்த நற்குடி வேளாளர்களின் ஒரு பிரிவினர்தான். இவர்கள் தான் இன்றைய தொண்டைமண்டல சைவவேளாளர்கள்.
இதே நாற்பத்தெண்ணாயிரவர் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற மற்றொரு உட்பிரிவு தான் சோழதேசவேளாளர்கள்
பிறகு தொண்டை, சேர, சோழ, பாண்டிய வேளாளர்களின் சிலர் கொங்குதேசம் சென்று காட்டை திருத்தி நாடாக்கி கொங்கு தேசத்தை உருவாக்கினார்கள். இவர்கள் கொங்கு வேளாளர்கள் என்று அழைக்க படுகிறார்கள்.இந்த செய்தி கொங்குமண்டல சதகம், தொண்டைமண்டல சதகம் போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணருடன் சென்ற வேளாளர்கள் போக, மற்றவர்கள் கங்கம்பாடி என்று அழைக்கப்பட்ட உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களில் தங்கிவிட்டனர். இவர்கள் பின்னாளில் தென்கர்நாடகதிற்கு இடம்பெயர்ந்து, அங்கு கட்டை திருத்தி, நாடு சமைத்தனர். இவர்கள் தங்களை காராளர் என்று அழைத்துக்கொண்டனர். காராளர் உருவாக்கியநாடு காராளர்நாடு. இது தான் பின்னாளில் கர்நாடகமாக உருமாறியது. மூவேந்தர்கள் ஆட்சி காலத்தில் இவர்கள் தமிழ் நாட்டில் குடியேறினார்கள். இவர்கள் தான் கார்காத்த வேளாளர்கள் ஆவார்கள். சோழதேசத்தை தலைமை இடமாக கொண்டிருந்த இவர்கள், பின்னாளில், இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பாண்டியமன்னனிடம் வாதிட்டு, அவன் சிறைவைத்திருந்த மேகங்களை மீட்டு, இந்திரனிடம் ஒப்படைத்தனர். (கார்)மேகம்தை மீட்டதால் இவர்கள் கார்காத்தார் என்று அழைக்கப்பட்டனர்,என்றும் சிலர் கூறுவார்கள் .
வேளாளர்கள் கங்கைக்கரையில் இருந்து வந்த கங்காபுத்திரர்கள் என்பதை பலர் ஒற்றுக்கொண்டாலும், அதற்குமுன் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வி எளவே செய்கிறது.
இன்றைய அறிவியல் ஆய்வுப்படி வடக்கில் வாழ்ந்த வேளாளர்கள் தான் சிந்துசமவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்பதும், சிந்துசமவெளிக்கு வருவதற்கு முன்பே அவர்கள் சுமேரிய நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்பதும் தெளிவாகிறது (DNA studies of Rakhigarghi)(The vellalas is mohanjadaro).
ஆகவே வேளாளர்கள் தான் உலகின் மிகவும் தொன்மையான சுமேரிய மற்றும் சிந்துசமவெளி நாகரிகங்களை உருவாக்கியவர்கள் என்பது தெளிவாகிறது. மனிதனின் நாகரிக வளர்ச்சிப்படி, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி வேளிர்குடி என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

 

யார் தமிழர்கள்???- மரபியல்ரீதியாக ஒரு ஆய்வுபார்வை
இன்று நாம், தமிழர்கள் என்று அடையாளப்படுத்தும் ஒரு இனக்குழு உண்மையில் நான்கு இனக்குழுக்களின் சேர்க்கை. இந்த நான்கு இனக்குழுக்கள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் இருந்து, இந்தியாவிற்கும்,பிறகு தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்தவர்கள். இதில் முதல்முதலில் தென்இந்தியாவிற்கு வந்தவர்கள் ஆப்ரிக்க வேட்டுவர்கள் (African hunter கைதேர்ஸ்/AHG). இவர்கள் ஆப்ரிக்காவில், எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவிக்கும்,பிறகு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது. இவர்களிடம் ancient ancestral south indian(AASI) என்ற மரபியல் கூறு இருந்திருக்கின்றது. இவர்கள் தான் ஆதிதிராவிடர்கள்.இவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறின மிகவும் தொன்மையான இனக்குழு. இவர்கள் எகிப்த்திய நாகரிகம் உருவாவதற்கு முன்பே ஆப்ரிக்காவில் இருந்து பிரிந்து,கிழக்குத்திசையாக, ஆஸ்திரேலியா வரை சென்றிருக்கிறார்கள். இவர்கள் எந்த வழியாக தென்னிந்தியாவிற்குள் வந்திருக்கக்கூடும் என்று தெரியவில்லை. தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த இவர்கள், பிறகு வடஇந்தியவரை பரவிருக்கிறார்கள். காட்டுவாசிகளாகிய இவர்கள்,பெருவாரியாக மிருகங்களை வேட்டையாடி உண்டு, குகைகளில் வாழ்க்கைநடத்தியிருக்க கூடும் என்று நம்பப்படுகின்றது. இவர்கள் ஆப்ரிக்கர்களை போல முன்னோர்வழிப்படை பின்பற்றியிருந்திருக்கக்கூடும் (ancestral worship). இன்று தமிழ் நாட்டில் காணப்படும் கள்ளர் மற்றும் இருளர் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வழித்தோன்றல்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவர்களுக்கு சற்றே முன்னோ அல்லது பின்னோ, sino-tibetian என்ற இனக்குழு இந்தோனேஷியா காடுகளில் இருந்து வடகிழக்கு இந்தியாவிற்கும், பின்பு தென்இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் தான் நாகர்கள். இவர்களும் காடு,மலை சார்ந்த பகுதிகளில் வசித்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இவர்கள் இந்தோனேசியாவில் இருந்து குடியேறியதால் இவர்களிடம் neanderthal DNA என்னும் மிகவும் தொன்மையான மரபியல் கூறு காணப்படுகின்றது. இவர்கள் நாகர்மொழி என்னும் தொன்மையான மொழியை பேசி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவர்கள் வடகிழக்கு இந்தியாவில் இருந்து வங்கம்,ஒரிசா,ஆந்திர வழியாக தமிழ் நாட்டிற்குள் வந்து, பிறகு கேரளம்,தென்கர்நாடகம் வரை பரவியிருக்க கூடும். இவர்கள் பெருவாரியாக நாட்டார்தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்திருக்க கூடும். இன்று தமிழ்நாட்டில் காணப்படும் மறவர் மற்றும் சாணார் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வழித்தோன்றல்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.நாகர்களும் ஆதிதிராவிடர்களும் சேர்ந்து உருவான இனக்குழு தான் அன்று இந்திய முழுவதும் பரவி இருந்திருக்கிறார்கள். இந்த இனக்குழுவை இன்று நாம் நாகர் கலப்பினம் (mixed nagas) என்று அழைக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் காணப்படும் பள்ளர்,பள்ளி,பறையர் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வாரிசாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மூன்றாவதாக,சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் சுமேரிய நாகரிகத்தில் இருந்து பிரிந்த ஒரு இனக்குழுவினர் ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் வழியாக சிந்து சமவெளி பகுதியில் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் தான் திராவிடர்கள். இவர்களை தான் இன்று நாம் மரபியல் ரீதியாக அறியப்படும் தொன்மையான சுமேரிய வேளாண்குடியினர் (ancient iranian neolitic farmers) என்று அழைக்கிறோம். இவர்களிடம் Bactria-Margiana Archaeological Complex (BMAC) என்ற மரபியல் கூறு அதிகமாக இருந்திருக்கின்றது. இன்று தமிழ் நாட்டில் காணப்படும் வேளாளர்,நகரத்தார்,கோனார் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வழித்தோன்றல்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இவர்கள் இங்கு பூர்வகுடியாக வாழ்ந்த நாகர் கலப்பினத்தவரோடு கலந்து சிந்துசமவெளி நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தென்னிந்தியர்களிடம் அதிகமாக Ancient South Indian (ASI) மரபியல் கூறு காணப்படுகின்றது. இந்த ASI மரபியல் கூறு AASI மற்றும் BMAC ஆகிய மூல மரபியல் கூறுகளின் சேர்க்கை. ஆக, இன்று தென்னிந்தியர் என்று நாம் அழைக்கும் இனக்குழு மூன்று இனக்குழுக்களின் (திராவிடர், ஆதிதிராவிட மற்றும் நாகர்) சேர்க்கையால் உருவாகியிருக்கிறார்கள். ஆதிதிராவிடர் மற்றும் நகர்களை போல் அல்லாமல், திராவிடர்கள் மொழி மற்றும் நெல் நாகரிகத்தில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் கொடுந்தமிழ் (proto-dravidian) மொழியை பேசியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவர்கள் சைவசமயத்தையும்,லிங்க வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் பின்பற்றியிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இவர்கள் ஆகமமதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்ததாக நம்பப்படுகின்றது.சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த இவர்கள் சைவசமயத்தையும்,தமிழ் மொழியையும்,நெல்நாகரிகத்தையும் தமிழ்நாட்டிற்கு கடத்திவந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.