Friday, August 22, 2025

 

Origin of Tamil brahmins 
முதலில் தமிழ் ப்ராஹ்மணர்கள் என்பவர்கள் ஒரு தனிப்பட்ட குலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. ஜாதியும் கிடையாது. இது அரசியல் காரணங்களுக்குகாக உருவாக்கப்பட்ட ஒரு சம்மேளனம். தமிழ் என்பது ஒரு மொழி குறியீடு. ப்ராஹ்மணர் என்பது ஒரு வர்ணம். அப்படி இருக்க தமிழ்ப்ராஹ்மணர் என்பது எப்படி ஒரு ஜாதியாக முடியும்?
முதலில் தமிழ் ப்ராஹ்மணர்கள் என்று இன்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மூன்று இனக்குழுக்களை சேர்ந்தவர்கள்: ஆரியர், திராவிடர் மற்றும் நாகர்.இவர்களுக்குள் எந்தவித மரபியல் தொடர்பும் கிடையாது.
#திராவிடப்ராஹ்மணர்கள்/அந்தணவேளாளர்கள்
இந்த மூன்று இனக்குழுக்களில் முதலில் இந்தியாவிற்கும்,பிறகு தமிழ்நாட்டிற்கும் வந்தவர்கள் திராவிட ப்ராஹ்மணர்கள். இவர்களை தான் சங்கஇலக்கியங்கள் வேதியர், மறையோர், பார்ப்பனர், அந்தணர் என்று பலவாறாக புகழ்கின்றன. இவர்கள், 18 வேளிர்களோடும்,18 குடி வேளாளர்களோடும் துவாரகாபுரியில் இருந்து அகத்தியரால் பாண்டியநாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்கள், என்று தொல்காப்பியம் கூறுகின்றது.இவர்கள் சுத்தமான தமிழர்கள்.சைவர்கள்.சிந்துசமவெளி நாகரிகத்தை சார்ந்தவர்கள்.பிற்காலத்தில் ஆகமங்களை தொகுத்து பயின்ற ஆகமபண்டிதர்கள். இவர்கள் பிற்காலத்தில் வெளிர் மன்னர்களோடும், வேளாளர்களோடும் மணஉறவு புரிந்தனர். அந்தண ஆணிற்கும் க்ஷத்திரிய மங்கைக்கும் பிறந்தவர்கள் ஆதிசைவர்கள். அதனாலயே அரசர்கள் கட்டின சைவகோவில்கள் அனைத்திலும் இவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நேயமிக்கப்பட்டனர். முப்போதும் திருமேனி தீண்டும் உரிமை இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. சிவாச்சார்யார் என்னும் பொதுவான பட்டம் தவிர்த்து இவர்களுக்கு முதலியார் பட்டமும் உண்டு (உதா- உமாபதி சிவம்-கொற்றவன்குடி முதலியார்,காட்சியப்ப சிவாச்சாரியார்- கச்சியப்ப முதலியார்).
ஆதிசைவர்கள் பிற்காலத்தில் வேளாளர்குல பெண்களை மணந்தனர்.இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் முன்குடுமி சோழியர் என்று நாம் அழைக்கும் மஹாசைவர்கள். இவர்கள் வேதத்தை முழுவதுமாக படித்தாலும்,ஆகமங்களை முழுவதுமாக படிக்கமுடியாது. இவர்களும் கோவில்குடிகளாக இருந்தாலும், கற்பகிரதத்திற்குள் செல்லும் உரிமை இல்லை. இவர்கள் பெருவாரியாக கோவில்களில் தீர்த்த கைங்கர்யம், புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டு, உபசந்நிதிகளில் பூஜை செய்பவர்களாக இருந்தனர். பட்டர் என்னும் பொதுவான பட்டம் தவிர்த்து, இவர்களுக்கு பிள்ளை பட்டமும் உண்டு (உதா- வடக்குதிருவீதி பிள்ளை, நடுவில் திருவீதி பிள்ளை, நம்பிள்ளை). சைவத்தில் நாம் போற்றிகொண்டாடும் சைவக்குரவர்கள் நால்வரில், சுந்தரமூர்த்தி நாயனார் ஆதிசைவர், சம்பந்தமூர்த்தி நாயனார் மஹாசைவர் (சோழியர்), அப்பர்ஸ்வாமிகள் வேளாளர்.
இதை போலவே க்ஷத்திரிய ஆணிற்கும், அந்தணப்பெண்களுக்கும் பிறந்தவர்கள் தான் வைகாநஸர்கள். ஆதிசைவர்களை போலவே இவர்களுக்கு வைணவகோவில்களில் அர்ச்சக அதிகாரம் முழுவதுமாக கொடுக்கப்பட்டது. அந்தக்காலத்தில் தென்னகத்தில் இருந்த அணைத்து வைணவகோவில்களிலும் வைகானச ஆகமம் தான் பின்பற்றப்பட்டது. ராமானுஜர் காலத்திற்கு பின்னே, சிலகோவில்கள் பாஞ்சராத்ர அகமத்திற்கு மாற்றப்பட்டன. ஆதிசைவர்களை போலவே, பிற்காலத்தில் வைகாநஸர்கள்,வேளாளர் குலபெண்களை மணந்தனர். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வைணவ சோழியர் அல்லது பூர்வசிகா ஸ்ரீவைஷ்ணவர்கள். மிக முக்கியமாக, 12 ஆழ்வார்களில், 3 ஆழ்வார்கள் (பெரியாழ்வார், மதுரகவியாழ்வார், தொண்டரடிபொடியாழ்வார்) இந்த குலத்தை சேர்ந்தவர்கள். சைவ சோழியர்களை போல் இவர்களும் கோவில்குடிகளாக இருந்தாலும், இவர்களுக்கும் வைகானச ஆகமத்தை கற்கும் அதிகாரமோ அல்லது மூலஸ்தானத்தில் பூஜைசெய்யும் அதிகாரமோ கிடையாது. இவர்களும் சைவசோழியர்களை போல பெரும்பாலும் கோவில்களில் தீர்த்த கைங்கர்யம், புஷ்பா கைங்கர்யம் செய்துகொண்டு உபசந்நிதிகளில் பூஜை செய்பவர்களாக இருந்தனர். ஆகா, ஆதிசைவர்கள், வைகாநஸர்கள் மற்றும் சோழியர் ஆகிய மூன்றுகுடிகள் மட்டுமே அர்ச்சகா குடிகளாகும். இவர்கள் அனைவருமே திராவிடப்ராஹ்மணர்கள்/அந்தணவேளாளர்கள்.
தமிழ்நாட்டில் மூவேந்தர்களின் ஆட்சி உருவானபின், இவ்வேந்தர்கள் பலமுறை வடக்கே படையெடுத்து வாகைசூடினார்கள். வாகைசூடி திரும்பும் பொது, இவர்கள் அங்கிருந்து, வேதத்தில் சிறந்த ஆரிய ப்ராஹ்மணர்களை இங்கே கொண்டுவந்து குடிஅமர்த்தினார்கள். இந்த ஆரியப்ரஹ்மணர்களுக்கு ஆகமக்கல்வி கிடையாது. இவர்கள் பெருவாரியாக அரசர்களுக்கு குலகுருக்கலாகவும்,மந்திரியகவும் இருந்து அரசு நிர்வாகத்தில் ஈடுபட்டினருந்தார்கள். இவர்கள் கோவில் கைங்கர்யம் செய்வதை விட ஹோமம்ங்கள்,யாகங்கள் போன்றவற்றில் தேர்ச்சிபெற்று இருந்தனர். இவர்கள் தான் மத்தியஆசியாவில் இருந்து, கங்கை கரைக்கு குடிபெயர்ந்த ஆரியவம்சத்தினர் என்று நம்பப்படுகின்றது.
இவர்கள் பெருவாரியாக சிவன், விஷ்ணு, அம்பிகை, லட்சுமி, முருகன், கணபதி, சூரியன், இந்திரன், அக்னி என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற அணைத்து தெய்வங்களையும் வழிபாடுபவர்களாக இருந்தனர். ஆதிசங்கரர் காலத்தி இவர்களில் பெரும்பாலானோர், அத்வைத கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் தான் ஸ்மார்த்த ப்ராஹ்மணர்கள். இவர்கள் சமஸ்க்ரிதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். தமிழை நீசபாஷையாக கருதுபவர்கள். இவர்கள் திராவிட வேதம் என்று போற்றப்படுகின்ற பன்னிருதிருமறை மற்றும் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவற்றை ஏற்கமாட்டார்கள். சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோரின் பரத்துவதையும் ஏற்கமாட்டார்கள். கடவுள் உருவம்,குணம் அற்றவர் (நிர்குண ப்ரஹ்மம்) என்று நம்புபவர்கள். இவர்கள் 17 ஆம் நூர்த்தாண்டிற்கு பின் ஐயர் என்னும் பட்டத்தை பயன்படுத்தத்தொடங்கினர். இவர்களில் வடமர், வாத்திமர், ப்ரஹசரணம் என்று மூன்று பிரிவுகள் உண்டு. இதில் ப்ரஹசரணத்தை சேர்ந்தவர்கள் தான் தொன்மையானவர்கள்.இவர்கள் கிருஷ்ணா,கோதாவரி நதிக்கரையில் இருந்து தமிழகத்திற்கு குடிவந்தவர்கள்.கடைசியாக வந்தவர்கள் வடமர். இவர்கள் வடுகதேசம் என்று அழைக்கப்படும் ஆந்திராவில் இருந்து குடியேறியவர்கள். வாத்திமரை பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை.
ராமானுஜர் காலத்திற்குப்பின் திராவிடப்ராஹ்மணர்களின் சிலரும் (முக்கியமாக சோழிய ப்ராஹ்மணர்கள்),ஆரியப்ராஹ்மணர்களின் சிலரும் (முக்கியமாக வடமர்) ஸ்ரீவைஷ்ணவத்திற்கு மாறினார்கள்.இவர்கள் ராமானுஜரின் விசிஷ்ட அத்வைதத்தை பின்பருபவர்கள். இவர்கள் 17 ஆம் நூற்றாண்டுகு பின் தங்களை, ஸ்மார்த்தர்களில் இருந்து அடையாளப்படுத்திக்கொள்ள, ஐயங்கார் என்னும் பட்டத்தை உபயோகிக்க ஆரம்பித்தனர்.ராமானுஜர் காலத்தில் பல அப்ராஹ்மணர்கள் அவருடைய சிஷ்யர்களாக சேர்ந்து, ஸ்ரீவைஷ்ணவர்களாக மாறினார்கள். இது ஸ்ரீவைஷ்ணவர்களில் இருந்த ப்ராஹ்மணர்களுக்கு பிடிக்கவில்லை. வடுகர் ஆட்சிக்காலத்தில் ஆரியப்ராஹ்மணானர்கள் பெருவாரியாக இருந்த பிரிவு தங்களை வடகலை என்று அடையாளப்படுத்திக்கொண்டனர். திராவிடப்ராஹ்மணர்களும்,அப்ராஹ்மணர்களும் பெருவாரியாக இருந்த பிரிவு தங்களை தென்கலை என்று அடையாளப்படுத்திக்கொண்டனர்.
வடகலையினர் சுவாமி தேசிகரையும், தென்கலையினர் சுவாமி மணவாளமாமுனிகளையும் தங்கள் ஆச்சரியராக ஏற்றுக்கொண்டனர். இன்று தமிழ் ப்ராஹ்மணர்களில் ஸ்மார்த்தர்களும்,ஸ்ரீவைஷ்ணவர்களும் தான் 95% உள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு திராவிடப்ராஹ்மணர்களுக்கு பின், ஆரியப்ராஹ்மணர்களுக்கு முன், குடிபெயர்ந்தவர்கள் நகர்ப்ராஹ்மணர்கள். இவர்கள் எண்ணிக்கையில் ஆரிய,திராவிட ப்ராஹ்மணர்களை விட மிக குறைந்தவர்கள். இவர்கள் கவுடதேசம் என்று சொல்லப்படுகின்ற வங்கதேசத்தில் இருந்து, களப்பிரர் காலத்தில் அவர்களோடு குடிபெயர்ந்தவர்களாக இருக்கலாம். இவர்கள் ஆதியில் சமணமதத்தை பின்பற்றுபவர்களாக இருந்திருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் எண்ணாயிரவர் என்றே குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் மதுரையை சுற்றி உள்ள 8 குன்றுகளில், குகைக்கோயில்கள் அமைத்து, தவம் செய்தார்கள் என்று நம்பப்படுகின்றது. கூன்பாண்டியன் காலத்தில் இவர்கள் பாண்டியநாட்டில் மிக்க செல்வசெழிப்போடும், செல்வாக்கோடும் வாழ்ந்திருக்கின்றனர். சம்பந்தமூர்த்தி நாயனார் இவர்களுடன் அனல்வாதம் மற்றும் புனல்வாதத்தில் ஜெயித்து,சைவசித்தாந்தந்தை நிலைநாட்டினார். வாதத்தில் தோற்ற சிலர் சைவத்தை ஏற்கமுடியாமல் கழுவேறினார்கள் (சமண கழுவேற்றம்).மற்றவர்கள் சம்பந்தபெருமானாரின் சிஷ்யர்களாக (சைவர்களாக) மாறினார்கள். பிற்காலத்தில், அதிசங்கரின் அத்வைத கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டு, இவர்கள் அத்வைதிகளாக (ஸ்மார்த்தப்ரஹ்மணர்களாக) மாறிப்போனார்கள். அந்தக்காலகட்டத்தில் தான் இவர்கள் தங்கள் குலப்பெயரை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து அஷ்டசஹஸ்ரம் என்று மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் இலங்கையில் அதிக அளவு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவர்களை பற்றி இரண்டு குறிப்புக்கள் கிடைக்கின்றன. கரிகாலசோழன், இலங்கைக்கு படையெடுத்துசெல்லும்பொழுது, கப்பல் கவிழ்ந்து கரைஒதுங்கினான். அப்பொழுது அவன் உயிரை காப்பாற்றியது ஒரு நாகசாதுவின் பெண்.
கரிகாலசோழனுக்கும் அந்த நாகப்ராஹ்மண பெண்ணிற்கும் பிறந்தவன் தான் ஆதொண்டை சக்ரவர்த்தி. இவர்தான் பிற்காலத்தில் தொண்டைநாட்டை உருவருகிறார். ராவணன் ஒரு நாகர்குல அரசன் என்றும் அவன் தந்தை ஒரு பிராஹ்மணர் என்றும், இராமாயணத்தில் குறிப்புக்கள் உள்ளன. அதனால் அவனும் ஒரு நகர்ப்ரஹ்மானாக இருக்க வாய்ப்பு உள்ளது.

No comments: