Friday, September 17, 2021

 

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம்

“அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்” என்னும் சட்டம், இந்து விரோத செயல் என்றும், சனாதன தர்மத்துக்கு முற்றிலும் விரோதமான்னு என்றும், சில "இந்து மத காவலர்கள்" உளறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது முற்றிலும் பொய். ஆதிகாலத்தில் சேர-சோழ-பாண்டிய மன்னர்கள், இன்று பெருந்தெய்வ  கோவில்கள் என்று வழங்கப்படும், சிவன் மற்றும் விஷ்ணு கோவில்களை கட்டிய பொழுது, அங்கு பல இனத்தவர்கள் பூஜை புனஸ்கரம் செய்த பணி அமர்த்தினர். தமிழ் முறை வழிபாடு மட்டுமே கோவில்வழிபாடாக இருந்தது. ஆகம விதிகள் என்று எதுவும் அப்பொழுது வழக்கில் இல்லை. வடக்கில் இருந்து வந்த ஸ்மர்த்த ப்ராஹ்மணர்கள், கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தனர். அதற்கு அவர்களில் தாய் மொழியான சமஸ்கிருதத்தை வழிபாட்டுமொழியாக மாற்ற நினைத்தனர். அதற்காக அவர்கள் செய்து சூழ்ச்சி வித்தையே ஆகமம் என்பது ஆகும். வேதங்களில் சில பகுதிகளை மட்டும் வைத்து இவர்களுக்கு தெரிந்த/தோன்றின கட்டிடக்கலை, சிற்பம், அலங்காரம் போன்ற நூதனகளை புகட்டி ஏற்படதுதான் இந்த ஆகமங்கள். இதை சிவன்கோவில்களுக்கு ஏற்றவாறு சைவ ஆகமங்களாகவும், விஷ்ணு கோவில்களுக்கு ஏற்றவாறு வைணவ ஆகமங்களாகவும் (இன்று இந்த ஆதிவைணவ  ஆகமங்கள் தான் தமிழ்நாடு, தென் கர்நாடகம், ஆந்திர மாநில விஷ்ணு கோவில்களில் வழக்கில் உள்ள வைகானச ஆகமமாகும்; பஞ்சாராத்திர ஆகமம் என்பது ஸ்ரீவைஷ்ணவம் தழைக்க தொண்டாகிய பிறகு சில விஷ்ணு கோவில்களில் புகுத்தப்பட்ட நூதன ஆகமம் ஆகும்). சிவன் கோவில்களில் ஊழியம் செய்து வந்த அப்ராஹ்மணர்களுக்கு பட்டை அடித்து (பஸ்மதாரணம்), பூணுல் மாட்டி, சைவ ஆகமத்தை பயிற்றுவித்து, பட்டர்களாக (சிவாச்சாரியாகளாக) மாற்றினார்கள். விஷ்ணு கோவில்களில் ஊழியன் செய்து வந்த அப்ராஹ்மணர்களுக்கு ஊர்த்துவபுண்டிரத்தை சார்த்தி (திருமண் காப்பு அல்லது நாமம் என்பது பிற்காலத்தில் ஸ்ரீவைஷ்ணவம் தழைக்க தொண்டாகிய பிறகுதான் கோவிலுக்குள் நுழைந்தது), பூணுல் மாட்டி, வைணவ ஆகமத்தை பயிற்றுவித்து பாட்டராச்சரியர்களாக மாற்றினார்கள். இவர்கள் வெறும் ஆகம பயிற்சி மட்டும் பெறுவதால் இவர்களை ஆகம ப்ராஹ்மணர்கள் என்று வேறுபடுத்தி வைத்தார்கள். இவர்களை ஸ்மார்த்த ப்ராஹ்மணர்கள் (இன்றைய ஐயர் மற்றும் ஐயங்கார் வகுப்பினர்) தங்களுக்கு நிகராக ஏற்பதில்லை. இவர்களோடு பெண் கொடுத்து பெண்ணேடுப்பதில்லை. இன்னும் சொல்ல பொன்னால் இவர்கள் வீட்டில் தண்ணீர் கூட அருந்தமாட்டார்கள். இவர்கள் ஒருவகையில் ஒடுக்குக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள். அனால் மன்னர் ஆட்சியில் அவர்களுக்கும் மன்னர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அதனால் தான் ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களால் இவர்களை கோவிலை விட்டு வெளியேற்ற முடியவில்லை. இன்று ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார்கள்) மற்றும் ஆதிவைணவர்கள் (வைகானச பாட்ராச்சாரியர்கள்) என்று பெருமை பீற்றிக்கொள்ளும் ஆகம ப்ராஹ்மணர்கள் அனைவருமே ஒருகாலத்தில் தமிழை தாய்மொழியாக கொண்ட அப்ராஹ்மணர்களா இருந்தவர்கள் தான். இவர்களுக்கு கருவறைக்குள் புகும் உரிமையும் கோவில் ஊழியம் செய்யும் உரிமையும் விட்டு கொடுப்பதுபோல் விட்டுக்கொடுத்து, கருபகிரஹத்துக்கு வெளியில் செய்யப்படும் வேதபாராயணத்தை ஸ்மார்த்தப்ராஹ்மணர்கள் தங்களிடம் வைத்து கொண்டனர் (பெருமாள் கோவில்களில் செய்யப்படும் ஆழ்வார்களின் திவ்யபிரபந்த பாராயணம் என்பது பிற்காலத்தில் ஸ்ரீவைஷ்ணவம் தழைக்க தொண்டாகிய பிறகுதான் கோவிலுக்குள் நுழைந்தது). அன்றில் இருந்தே வேதப்ராஹ்மணர்கள் ஆகமப்ராஹ்மணர்களை தங்கள் கைப்பாவையாகிக்கொண்டனர். இவர்கள் ஈருவரும் சேர்ந்து தமிழை, நம் தமிழ் மன்னர்கள், தமிழ் மக்கள் வரிப்பணத்தால், கட்டிய தமிழ் கோவில்களில் இருந்து முற்றுமாக அழித்தனர். கருவறைக்குள் புகும் உரிமை, கற்பகிரஹத்தில் இருந்தே வருவது என்னும் முறையை கொண்டுவந்தனர். கருவறைக்குள் தமிழ் ஒலிக்கக்கூடாது ஏனென்றால் தமிழ் நீசபாஸை என்னும் புரளியை கிளம்பிவிட்டனர். அதனால் தான் ஆழ்வார்களின் ப்ரபந்தத்திலோ நாயன்மார்களின் பன்னிரு மறைகளிலோ ஆகமங்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை.

பிற்காலத்தில் வந்த ராமானுஜர் வைணவத்தை தனிமதமாக வளர்க்க நினைத்தார். விஷ்ணுகோவில்கள் அனைத்திலும் இந்தமுறையை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார். உண்மையான பக்தியுடைய எல்லோரும் அர்ச்சகராகும்வன்னம் பஞ்சாரத்திர ஆகமத்தை, எல்லா விஷ்ணு கோவில்களிலும் நடைமுடைபடுத்த நினைத்தார். தெய்வமொழியாம் தமிழ்மொழியை ஆண்-பெண் பாகுபாடின்றி எல்லா விஷ்ணு கோவில்களிலும் ஒலிக்கும்வன்னம்  திவ்யபிரபந்தகோஸ்டி என்னும் தமிழ் கோஷ்டி வழிபாட்டுமுறையை ஏற்படுத்தினார். ஆனால் அப்பேற்பட்ட ராமனுராலும் ஸ்மார்த்த-ஆகம ப்ராஹ்மணர்களில் சூழ்ச்சியை முழுவதுமாக முறியடிக்கமுடியவில்லை, என்பதே உண்மை. இன்றும் பஞ்சராத்திர ஆகமமும், ஸ்ரீரங்கம் பெரியகோவில், காஞ்சி பெருமாள் கோவில், மேலகோட்டை ஆகிய மூன்று கோவில்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. எந்த ஆகமம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று எண்ணினாரோ, அந்த ஆகமம் வெறும் சில ஸ்மார்த்த ப்ராஹ்மண குடும்ப சொத்தாக மாறியுள்ளது. இன்னும் சொல்லபோன்னால் ஸ்ரீரங்கம் பெரியகோவிலில் அர்ச்சகம் செய்யும் பஞ்சராத்திர அர்ச்சகர்கள் ஒருகாலத்தில் வைகானச ப்ராஹ்மணர்களாக இருந்து, பின்பு தங்கள் அர்ச்சக தொழிலை தக்கவைத்துக்கொள்ள ராமானுஜ கோஷ்டியினரால் பஞ்சராத்திர ஆகமத்துக்கு மற்றப்பட்டவர்கள், என்ற செவிவழி செய்தியும் உண்டு. இன்றும் இவர்கள் அங்கு உள்ள ராமானுஜர் சந்நிதிக்கு போவதில்லை என்பதே உண்மை. இதன் காரணமாகவே அன்று ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் ராமனுஜருக்கு விஷம் வைத்து கொல்லப்பார்த்தார் என்றும், அதன் காரணமாக ராமானுஜர் பிற்காலத்தில் உஞ்சவிருத்தி செய்வதையே விட்டுவிட்டார் என்றும் செவிவழி செய்திகள் உண்டு. மேலும் சைவர்கள் ராமாநுஜரிடம் பகைமை பூண்டு கிருமி சோழனை அவருக்கு எதிர்த்தாற்போல் திருப்பி விட்டனர் என்று பலர் நினைத்தாலும், உண்மையில் ராமானுஜ மதத்தை ஏற்காத வைணவ ஸ்மார்த்த-ஆகம ப்ராஹ்மணர்கள், இதை செய்திருக்கவும் மிகுந்த வாய்ப்புகள் உண்டு. அனைத்து ஜாதியினரும், ஆண்-பெண் பாகுபாடின்றி, தூய தமிழில் கோவிலுக்குள் துதிக்கவேண்டும் என்னும் உயரிய நோக்கோடு கொண்டுவரப்பட்ட ஆழ்வார்களின் அருளிச்செயல் கோஷ்டி, இன்று நடைமுறையில் சில வைணவ ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களின் (ஐயங்கார்கள்) ஏகபோக உரிமையாக  மாறிப்போயுள்ளது என்பதே உண்மை. இன்று ராமானுஜ மதத்தை பின்பற்றும் பெருமாள் கோவில்களில்  கூட பூணுல் அணியாத வைணவ பக்தர்களை (சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள்), பாகவதர்கள் என்று ஓரம்கட்டப்பட்டு, அருளிசெயேல் கோஷ்டியில் கூட சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இதுவே நிதர்சனமான உண்மை. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டம் மட்டும் தான்.      

கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று கூறும் நாத்திக அரசு கோவில்களில் மூக்கை நுழைப்பதேன்?

அரசோ அரசமைத்த ஒருகட்சியின் தலைவரோ நாத்திகராக இருக்கலாம். ஆனால் அந்த அரசுக்கு ஓட்டு போட்ட மக்களில் 90% பேர் இறைநம்பிக்கையுள்ள ஹிந்துக்கள். அவர்களுக்கு வாக்களித்த ஹிந்துக்களின் உரிமைக்காக அவர்கள் போராடுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. இது அரசின் ஆணை அல்ல. இறைநம்பிக்கையுள்ள ஒவொரு ஹிந்துவின் உரிமை.       

 

கோவில்களுக்கு போடப்படும் இந்த சட்டங்களை போல் தேவாலயங்களுக்கு மசூதிகளுக்கும் போடா முடியுமா?

தேவாலயங்களிலும் மசூதிகளிலும் இதை போல் ஜாதி பகுபாடு பார்க்கப்படுகின்றது என்று ஒருவர் புகார் அளித்தால் இதே அரசு அந்த வழிபாட்டுத்தலங்கலின் பேரிலும் நடவடிக்கை எடுக்கும். இன்றுவரை எந்த தேவாலயதிலோ  மசூதியிலோ இப்படி பட்ட ஜாதி பாகுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருக்கும் பொழுது, அரசு எதற்காக அவர்கள் வழிபாட்டுமுறையில் தலையிடவேண்டும்

 

அர்ச்சக தொழிலில் இட ஒதுக்கீடு கொண்டுவரநினைக்கும் அரசு மற்ற அரசு தொழில்களில் ப்ராஹ்மணர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்குமா?

இன்று ப்ராஹ்மணர்களுக்கும் அரசு உத்யோகத்தில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஆகம ப்ராஹ்மணர்கள் அவர்களுக்கு வரிக்கப்பட்ட அர்ச்சக தொழிலையும், ஸ்மார்த்த ப்ராஹ்மணர்கள் அவர்களுக்கு விரிக்கப்பட்ட வேதா பராயணத்தையும் மட்டுமே செய்வதாக உறுதி எடுத்துக்கொண்டால், மற்றவர்கள் அவர்கள் தொழிலுக்கு போட்டிபோட போவதில்லை. ப்ராஹ்மணர்கள் எல்லாவித தொழிலையும் செய்யலாம் ஆனால் மற்றவர்கள் யாரும் அவர்கள் தொழிலை செய்யக்கூடாது என்னும் இருநிலைப்பாடு இருபதால் தான் இந்த பிரச்னை வந்துள்ளது.    

இது இந்து மக்களின் கோரிக்கையே அல்ல; வேற்றுமதத்வரின் தூண்டுதல் ஆகும்.  

சங்கிகள் கேட்கும் முட்டாள் கேள்விகளுக்கு நாம் சரியான விடையளித்துவிட்டாலோ, அல்லது நாம் சரியான கேள்வி கேட்டு முட்டாள் சங்கிகளுக்கு பதில் தெரியவில்லை என்றாலோ, உடனே சங்கிகளுக்கு தெரிந்த ஒரே கோட்பாடு கேள்விகேட்பவர்களை இந்துக்களே அல்ல என்று பிணர்த்துவது, அல்லது அவர்கள்  பிறமதத்தவர் என்றோ அல்லது பிறமாதத்தவர்களிடம்  இருந்து பணம் பெற்றிருப்பார்கள் என்றோ பிணர்த்துவதுதான்.